2016-ம் ஆண்டில் மட்டும் 6,000 மில்லியனர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர் – அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்!

அடுத்த பத்தாண்டுகளில் உலகின் அதிக மில்லியனர்களை கொண்டுள்ள டாப் நாடுகளின்  பட்டியலில் இந்தியா முதன்மை இடம்பிடிக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கடந்த 2016ம் ஆண்டு மட்டும் இந்தியாவிலிருந்து 6,000 மில்லியனர்கள் வெளியேறியுள்ளனர் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலையும் “நியூ வேர்ல்ட் வெல்த்” என்னும் நிறுவனத்தின் வருடாந்திர ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள சொத்துகளின் மதிப்பு அடுத்த பத்தாண்டுகளில் 35 சதவீதம் வரை  உயருமென்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 2,64,000 மில்லியனர்கள் மற்றும் 95 பில்லியனர்கள் இருக்கும் இந்தியாவின் சொத்து மதிப்பும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து சீனா, மொரீசியஸ், ஸ்ரீலங்கா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளோடு 2026ம் ஆண்டில் உலகின் சிறந்த சந்தைகளுள் திகழுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையில் புலம்பெயரும் இந்திய மில்லியனர்கள்!

கடந்த 2016ம் ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 82,000 மில்லியனர்கள் தங்களின் தாய்நாட்டை விட்டு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்ந்துள்ளனர். இந்த எண்ணைக்கையானது கடந்த 2015ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 18,000 அதிகமாகும்.

அதேவேலையில் கடந்த 2016ல் மட்டும் இந்தியாவை சேர்ந்த மில்லியனர்கள் ஆறாயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறி அரபு நாடுகள், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2000வது ஆண்டு முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 69,000 இந்திய மில்லியனர்கள் புலம்பெயர்ந்துள்ளதாகவும், அதில் கடந்த 2014ல் 6000 பேரும் மற்றும் 2015ல் நான்காயிரம் பேரும் அடக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்நாட்டை விட்டு புலம்பெயரும் மில்லியனர்கள் அதிகம் செல்லும் நாடுகள்  (2016)

நாடு

எண்ணிக்கை

ஆஸ்திரேலியா

11,000
அமெரிக்கா

10,000

கனடா

8,000
ஐக்கிய அரபு அமீரகம்

5,000

நியூஸிலாந்து

4,000

புலம்பெயரும் மில்லியனர்களின் சொந்த நாடுகள் (2016)

நாடு

எண்ணிக்கை

பிரான்ஸ்

12,000

சீனா

9,000

பிரேசில்

8,000
இந்தியா

6,000

துருக்கி

6,000

ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் மில்லியனர்களை ஈர்ப்பதற்கும், பிரான்ஸ் போன்ற நாடுகள் இழப்பதற்கும் காரணங்கள்:

மேற்காணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கடந்த 2016ல் மட்டும் 12,000 மில்லியனர்களை பிரான்ஸ் இழந்துள்ளது. பிரான்சில் கடந்த சில ஆண்டுகாலமாக கிறித்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள் இடையே நீடித்துவரும் சமயரீதியான பிரச்சனைகளே அதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதேவேளையில் ஆஸ்திரேலியாவின் சிறந்த கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் ஆசிய நாடுகளுடன் இணைத்து தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் குறைந்த வரிவீதம் ஆகியவையின் காரணமாக அதிபட்ச மில்லியனர்களின் விருப்பத்தேர்வாக அமைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பணக்கார(ர்களின்) நகரம் மும்பை!

உலக நாடுகளின் மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்கள் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு டாப் பணக்கார நகரங்கள் பற்றிய தகவல்களும் அந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதன்படி $820 சொத்துக்களுள்ள 46,000 மில்லியனர்கள் மற்றும் 28 பில்லியனர்களுடன் மும்பை முதலிடத்தையும், $450 பில்லியன் சொத்துக்களுள்ள 23,000 மில்லியனர்கள் மற்றும் 18 பில்லியனர்களுடன் டெல்லி இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது. கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புனே, சென்னை மற்றும் குருகிராம் ஆகிய நகரங்கள் முறையே 9,600, 7,700, 9,000, 4500, 6,600 மற்றும் 4,000 மில்லியனர்களை கொண்டுள்ளது.

நகரம்

மில்லியனர்கள் எண்ணிக்கை

பில்லியனர்கள் எண்ணிக்கை

மொத்த சொத்து மதிப்பு

மும்பை

46,000

28

$820 பில்லியன்

டெல்லி

23,000

18

$450 பில்லியன்

கொல்கத்தா

9,600

4

$290 பில்லியன்

ஹைதராபாத்

9,000

6

$310 பில்லியன்

பெங்களூரு

7,700

8

$320 பில்லியன்

சென்னை

6,600

4

$150 பில்லியன்

போயஸ் கார்டன்தான் சென்னையின் விலையுர்ந்த பகுதி!

அரசியல் மாற்றங்களின் முக்கிய இடமாக இருந்து வரும் போயஸ் கார்டன் சென்னையின் விலைமதிப்புமிக்க இடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பட்டியலில் போட் கிளப் ரோடும்  இடம் பெற்றுள்ளது.

Sairam Jayaraman

Founder & Editor-In-Chief - Udagam 360

Sairam Jayaraman has 49 posts and counting. See all posts by Sairam Jayaraman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *