அறிமுகம்…ஆப்பிள் ஐபோன் 7 ஹைலைட்ஸ்!

ஒவ்வொரு வருடமும் புதிய ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. இந்த வருடம் புதிதாக ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் ஆகியவற்றை சான்பிரான்சிஸ்கோவில் ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்தார்.

டிம் குக்

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் – 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மாடலைப் பொறுத்து மாறுபடுகிறது. அமெரிக்காவில் ஐபோன் 7 குறைந்தபட்சம் 709 டாலரில் தொடங்கி, அதிகபட்சம் 849 டாலர் வரை விற்கப்படுகிறது. ஐபோன் 7 ப்ளஸ் 809 டாலரில் தொடங்கி, 949 டாலர் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன்  7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் முறையே 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச்  ரெட்டினா ஹெச்டி டிஸ்ப்ளேயுடன் கூடிய 3டி தொடுதிரை கொண்டுள்ளது. இது முன்பு வெளியான ஐபோன்களைவிட 25% கூடுதல் பிரைட்னஸ் கொண்டதாக உள்ளது.

இந்த போனை அறிமுகப்படுத்திப் பேசிய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர் ஜான் ஐவி, இந்த போன் தரமாகவும் அழகாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக அதிக சிரத்தை எடுத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். ஐபோன்களிலேயே இதுதான் பெஸ்ட் என்பதைத் திரும்பத் திரும்ப சொல்லி இருக்கிறார் அவர்.

 

ஆப்பிளின் பிரத்யேகமான ‘A10 ஃப்யுசின்’ சிப்கள் முதல் முறையாக இந்த இரண்டு மாடல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன.  இது 2.4GHz பிராசஸர் கொண்டுள்ளதால், அதிக அளவிலான ஆப்ஸ்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். அதே போன்று இந்த மேம்படுத்தப்பட்ட பிராசஸரின் காரணமாக கடந்த ஐபோன் மாடல்களைவிட அதிக நேரம் சார்ஜ் நிற்கும். இந்த இரண்டு போன்களிலும் உள்ள கேமராவின் மூலம் டிஎஸ்எல்ஆர் கேமராவுக்கு இணையான புகைப்படங்களை எடுக்க முடியும்.

இந்த இரண்டு போன்களும் சில்வர், கோல்டு, ரோஸ் கோல்டு, பிளாக் மற்றும் ஜெட் பிளாக்  ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. இந்த போன்கள் தண்ணீரில் விழுந்தாலும் பாதிப்படையாது. செப்டம்பர் 16-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று சொல்லப்படுகிற  ஐபோன் 7, அக்டோபர் 7-ம் தேதி  இந்தியாவில் விற்பனைக்கு வரும். விலை அதிகமில்லை ஜென்டில்மென், ரூ.60,000 மட்டுமே! இந்த தீபாவளி ஐபோன் 7-உடன்தான்!

Sairam Jayaraman

Founder & Editor-In-Chief - Udagam 360

Sairam Jayaraman has 49 posts and counting. See all posts by Sairam Jayaraman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *